Header image alt text

1985.02.08 அன்று பாக்குநீரிணையில் கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் தம் இன்னுயிரை ஈந்த கழகத்தின் பிரதான கடலோடி தோழர்கள் ஞானவேல் (பாண்டி-வல்வெட்டித்துறை), சுதாகரன், ரஞ்சித் (டக்ளஸ்), ரூபன் (மோகன்ராஜ்-நெல்லியடி), அம்பி (இரவீந்திரன்-கிளிநொச்சி) ஆகியோரின் 35வது ஆண்டு நினைவாக,

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமத்தைச் சேர்ந்த, கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியினை, ‘தாயக மக்களின் மீள் எழுச்சி’க்கான செயற்திட்டத்திற்கமைய புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளை வழங்கியிருந்தது. Read more

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எனும் புதிய அரசியல் கூட்டணி வடக்கில் இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது. சி.வி விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, சட்டத்தரணி ஶ்ரீகாந்தாவின் தலைமையிலான தமிழ் தேசியக் கட்சி, அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைந்து கொண்டன. Read more

ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர் மொஹமட் ஹூமாயொன் க்வயம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளர்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் சிறப்பு ஆலோகராக உள்ள இவர், குறித்த சந்திப்பின் போது இருதரப்பு மற்றும் பிராந்திய உறவுகளின் வளர்ச்சி குறித்து ஜனாதிபதியுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

33 புதிய கட்சிகள் பதிவு செய்தலுக்காக விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உதய கம்பன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய கட்சியும் இவற்றில் உள்ளடங்குவதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்தல் தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. Read more

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் 800 இற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் தாக்கப்பட்டமை தொடர்பிலேயே, அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. Read more

மட்டக்களப்பு வாழைச்சேனை வட்டுவான் வயல் பகுதியில் 5 மிதிவெடிகளை விசேட அதிரடிப்படையினர் நேற்று மாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த வயல் பகுதியில் வைத்து மேற்படி மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கும் படையினரால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 மிதிவெடிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று குண்டுவெடிப்பு இடம்பெற்ற சிலாவத்தை வீட்டிலிருந்து மேலும் சில வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் பூட்டி இருந்த குறித்த வீடு பொலிஸார் சோதனை செய்த நிலையில் சுமார் மூன்று கிலோவுக்கு அதிகமான வெடிமருந்து பொருட்கள் வீட்டினுள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் தொடர்ச்சியாக இந்த வெடிபொருட்களிலிருந்து மருந்துகளை பிரித்தெடுத்து வியாபாரம் செய்த ஒருவராக இருந்திருக்க வேண்டும் எனவும் இவ்வாறான நிலையிலேயே இன்றும் குண்டு ஒன்றிலிருந்து மருந்தை பிரித்தெடுக்க முற்பட்ட நிலையிலேயே குண்டு வெடித்து இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more