33 புதிய கட்சிகள் பதிவு செய்தலுக்காக விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உதய கம்பன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய கட்சியும் இவற்றில் உள்ளடங்குவதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்தல் தொடர்பில் மேற்பார்வை செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி வரை புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இக்காலப்பகுதிக்குள் பதிவிற்காக விண்ணப்பிக்கும் புதிய அரசியல் கட்சிகளின் தகுதிகளை பரிசீலனை செய்து அதன்பின், பதிவு செய்யப்படவுள்ளன.

இக் காலத்திற்குள் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், புதிய அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் எனவும் ஆணைக்குழு பேச்சாளர் கூறியுள்ளார்.