1985.02.08 அன்று பாக்குநீரிணையில் கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் தம் இன்னுயிரை ஈந்த கழகத்தின் பிரதான கடலோடி தோழர்கள் ஞானவேல் (பாண்டி-வல்வெட்டித்துறை), சுதாகரன், ரஞ்சித் (டக்ளஸ்), ரூபன் (மோகன்ராஜ்-நெல்லியடி), அம்பி (இரவீந்திரன்-கிளிநொச்சி) ஆகியோரின் 35வது ஆண்டு நினைவாக,

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமத்தைச் சேர்ந்த, கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியினை, ‘தாயக மக்களின் மீள் எழுச்சி’க்கான செயற்திட்டத்திற்கமைய புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளை வழங்கியிருந்தது.போரதீவுபற்று பிரதேசசபை உபதவிசாளர் தர்மலிங்கம் அவர்களின் தலைமையில் தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மண்முனை மேற்கு பிரதேச சபை உபதவிசாளர் பொ.செல்லதுரை, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா,

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்களான ந.ராகவன், கா.கமலநாதன், மு.ஞானப்பிரகாசம், க.கிருபைராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.சாந்தகுணம் உட்பட பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.