Header image alt text

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரால் அனைத்து அமைச்சுகள் மற்றும் செயலகங்களுக்கு 07ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில், பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், எட்டு மாணவர்களுக்கு,

இன்றையதினம் முதல், பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறை விஷேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட காவல்துறை மா அதிபர் லயனல் குணதிலக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

காவல்துறை விஷேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றி வந்த எம்.ஆர் லதீப் ஓய்வு பெற்றதை அடுத்து குறித்த பதவிக்கு லயனல் குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. பெப்ரவரி 9 ஆம் திகதி வரை 910 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று மட்டுமே அங்கு அதிகபட்சமாக 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, அங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை சுமார் 40,553 பேர் கொரோனா வைரஸால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை சுமார் 3,324 பேர் குணமடைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மற்றொரு சிரேஷ்ட மாணவருக்கும் மறு அறிவித்தல் வரை,

பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read more

வவுனியாவில் இரு இடங்களில் இராணும் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் இருந்து தென் பகுதிக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே அண்மைய நாட்களில் இச்சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. Read more

கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பட்டது.

இதன்போது, பிரதேசத்தில் சவாலாக விளங்கும் போதைப் பொருளைக் கட்டுப்படுத்தக் கோரிய மகஜர் மதத் தலைவர்கள் மற்றும் பொலிஸாருக்கு கையளிக்கப்பட்டது. Read more

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் நேற்றுக்காலை காந்தி பூங்கா முன்பாக பேரணியாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத் தேர்தலுக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க கோரியும் பட்டதாரிகள் நியமன வயதெல்லையினை 35க்கு மேல் உயர்த்தக் கோரியுமே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை உறுதிப்படுத்துமாறு காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அலுவலகம் பொதுமக்களை கோரியுள்ளமை சர்வதேசத்தின் மீதான ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள தற்காலிகப் பட்டியலை உறுதிப்படுத்துமாறு காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் அலுவலகம் பொதுமக்களை கோரியுள்ளது. Read more