கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பட்டது.

இதன்போது, பிரதேசத்தில் சவாலாக விளங்கும் போதைப் பொருளைக் கட்டுப்படுத்தக் கோரிய மகஜர் மதத் தலைவர்கள் மற்றும் பொலிஸாருக்கு கையளிக்கப்பட்டது. குறித்த பகுதியில் காணப்படும் அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக குடும்பங்களுக்குள் நிம்மதியற்ற நிலை காணப்படுவதாகவும், குடும்ப வன்முறைகள் இடம்பெறுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், பாடசாலை செல்லும் வயது மாணவர்கள் குறித்த பழக்கத்திற்கு ஆளாகின்றனர் எனவும் கல்வி கற்கும் வயதில் குடும்ப நிலை காரணமாக தொழில்களுக்குச் செல்ல வேண்டிய நிலை சிறுவர்கள் மத்தியில் காணப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.