வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. பெப்ரவரி 9 ஆம் திகதி வரை 910 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று மட்டுமே அங்கு அதிகபட்சமாக 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, அங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை சுமார் 40,553 பேர் கொரோனா வைரஸால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை சுமார் 3,324 பேர் குணமடைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.