இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்த்தானிகர் சரா ஹல்ட்டன் ஒபே, திருகோணமலை மாவட்டப்  பதில் அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜாவை நேற்று மாவட்டச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.கல்வி, பொருளாதாரம், காணி, மீள்குடியேற்றம் உட்பட மாவட்டத்தின் முக்கிய துறைசார் அபிவிருத்தி, அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தவுள்ள பல அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி இதன்போது மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் தெளிவுபடுத்தினார்.

இந்தச் சந்திப்பில், மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபனும் உடனிருந்தனர்.