உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாகக் கைதுசெய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல், இம்மாதம் 25ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமையகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் இன்று (11) ஆஜர்படுத்தப்பட்டபோதே, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே இவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதன்போது மொத்தமாகக் கைது செய்யப்பட்ட 64 பேரில் மூவர் ஏற்கெனவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.