இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 2.34 மணிக்கு 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை இன்று அதிகாலை 2.34 மணிக்கு விடுக்கப்பட்டிருந்தது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்தினால் இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை, இலங்கையின் கரையோர பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகாரம் பெற்ற உள்ளூர், வெளிநாட்டு ஸ்தாபனங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக தேசிய சுனாமி முன்னெச்சிக்கை நிலையத்தினால் விடுக்கப்ட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.