வானிலை மாற்றத்தினால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மீனவர்கள் பலரும் கடல் தொழிலுக்குச் செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஓரிரு தினங்களாக இந்தக் கொந்தளிப்பு நிலை காணப்படுவதாகவும் இதேவேளை, ஆழ்கடல் மீனவர்கள் உட்பட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு, பூநொச்சிமுனை, காத்தான்குடி போன்ற பிரதேசங்களிலுள்ள நூற்றுக்கணக்கான மீனவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். மீன்படி படகுகளை கரையில் நிறுத்தியுள்ளதுடன், பெரிய படகுகளையும் வெளியிடங்களிலுள்ள வாவியில் நிறுத்தி வைத்துள்ளனர்.

கடந்த மாரி காலத்தின் போதும் சீரற்ற வானிலையினால் இரண்டுமாதங்களுக்கு மேலாக இவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருந்தது.