வவுனியா, முருகனூர் பிரதேசத்தில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரின் கணவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.இளம் தம்பதி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பாதுகாப்பு சுவர் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 25 வயதுடைய பெண் உயிரிழந்துள்ள நிலையில், அவரின் கணவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.