சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு படகு மூலம் வந்த இந்திய பிர​ஜைகள் மூவர் மன்னாரில் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடல் பரப்புக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிகொண்டிருந்ததை அவதானித்ததையடுத்து குறித்த படகை கடற்படையினர் சோதனையிட்டுள்ளதுடன் படகிலிருந்து இந்திய பிரஜைகளை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஆண் ஒருவரும், பெண்னொருவரும், 07 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவரும் அடங்குவதோடு, அவர்களை அழைத்து வருவதற்கான படகுக கடலுக்கு கொண்டுச் சென்ற இலங்கையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் இருவரும் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், இவர்களிடத்தில் தொடர்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.