ஆவரங்கால்  இந்து இளைஞர் விளையாட்டுக்கழக கரப்பந்தாட்டப்போட்டி நிலைய மைதானத்தில் இடம்பெற்றது.நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ல.அனுராகாந்தன், வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையின் உப தவிசாளர் ம.கபிலன், வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையின் ஆவரங்கால் வட்டார உறுப்பினர் தி.கமலநாதன் மற்றும் நல்லூர் பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ர.யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் , கோப்பைகளும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.