ஏழாலை  சைவ மகாஜன வித்தியாசாலை இல்ல மெய்வல்லுனர் விழா 14.02.2020 வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் தலைமையில்  பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், கிருபா லேர்னர்ஸ் உரிமையாளர் கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் மூத்த சமூக சேவையாளர் திருஞானசம்பந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்களின் மெய்வல்லுநர் நிகழ்ச்சிகள் மற்றும் இடைவேளை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன், வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள்  மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் விருந்தினர்களுடன் அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள், ஊரவர்கள். பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.