பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரிப்கான் பதியுதீன் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (17) ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை 25,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் இரகசிய பொலிஸார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதுடன் அவருக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வழக்கை 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தலைமன்னார் பகுதியில் உள்ள 24 மில்லியன் பெறுமதியான 40 ஏக்கர் நிலம் ஒன்றிற்கு போலி உறுதிப்பத்திரம் தயாரித்து மோசடி செய்ததாக ரிப்கான் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.