யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி வளாகத்தில், இன்னுமொரு பகடிவதை சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தால், இன்று (18), கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், தொலைபேசி இலக்கமொன்றை கொடுத்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக தொலைபேசி இலக்கத்தை ஆராய கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மற்றுமொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.