யாழ். சுதுமலை  ஈஞ்சடி நாவலர் முன்பள்ளியின் கால்கோள்விழா நேற்று(17.02.2020) திங்கட்கிழமை மாலை 04 மணியளவில்நிலையத்தலைவர் பேரின்பநாயகம் தலைமையில் நிலைய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக  முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன் சிறப்பு  விருந்தினர்களாக வலி.தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச பிரதேச சபை உறுப்பினர் பே.சுபாகர் மற்றும் யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஸ்ரீகணேசன் மற்றும் மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலையின் அதிபர் பேரின்பநாயகம் மற்றும் சுதுமலை சிந்மயபாரதி பாடசாலை அதிபர் மகேந்திரம் மற்றும் சண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் கேமநளினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் புதிய மாணவர்களை இணைக்கும் கால்கோள்விழா மற்றும் 2019ஆம் ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வு என்பன இடம்பெற்றதுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் விருந்தினர்களுடன் மாணவர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், பெற்றோர், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.