இலங்கை சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் வன் டோன்ங் நேற்று (17) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.அதன்படி, கடற்படை தலைமையகத்திற்கு சென்றிருந்த இலங்கை சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் வன் டோன்ங், விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கி கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டார்.

அவர் பாதுகாப்பு ஆலோசகராக கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் கடற்படை தலைமையகத்திற்கு சென்ற முதல் விஜயம் இதுவாகும்.

கடற்படைத் தளபதியும், இலங்கை சீன தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகரும் பல முக்கியமான விடயங்கள் குறித்து நல்லுறவைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.