யாழ். ஏழாலை மேற்கு சரஸ்வதி விளையாட்டுக் கழகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.ஏழாலை மேற்கில் உள்ள சரஸ்வதி சனசமூக நிலையம் மற்றும் சரஸ்வதி விளையாட்டுக்கழக நிர்வாக அங்கத்தவர்களை அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபை தலைவர் ஆகியோர் சந்தித்து சனசமூக நிலையம் மற்றும் விளையாட்டுக்கழகத்தினதும் பல்வேறு தேவைகள் குறித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது விளையாட்டுக்கழகத்தின் உடனடி வேண்டுகோளாக விளையாட்டு உகரணங்களின் தேவைகுறித்து பாரளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்தே பாரளுமன்ற உறுப்பினரால் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் சரஸ்வதி விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேசசபைத்  தலைவர் க.தர்ஷன், பிரதேச கிராம சேவகர் அ.அகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.