தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 153 சந்தேகநபர்களிடமும் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான விசேட ஊடக சந்திப்பு ஒன்று தற்சமயம் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.