எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய கட்சிகளை பதிவு செய்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிகளவில் அவதானத்தை செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

150 க்கும் அதிகமான புதிய கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அது தொடர்பான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

நிலவும் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் சின்னங்களை மாற்றுவது தொடர்பில் பிரச்சினைகளும் காணப்படுகின்றன.

இத்தினங்களில் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.