Header image alt text

முகாம்களில் தங்கியிருப்பவர்கள் தமது வாக்குகளை, தாம் தங்கியிருக்கும் இடங்களிலேயே அளிப்பதற்கான வாக்களிப்பு நிலையங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமைக்கப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த வாக்களிப்பு நிலையங்கள் நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு அமைய அமைக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். இன்று வவுனியாவில் நடைபெற்ற சர்வதேச தாய்மொழி தின நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எந்தவொரு நபருக்கும் இரு இடங்களில் வாக்களிக்க முடியாது. Read more

ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பப்படிவங்களை ஒப்படைத்து, 04 மணிநேரத்திற்குள் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு அவர்களது தேசிய அடையாள அட்டைகள் தயாரானதும் விண்ணப்பதாரியின் கையடயக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார். Read more

செம்பிய நாட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் டபிள்யூ.எம். சிகாஸ்வே நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு இன்று இலங்கைக்கு ஐந்து நாள் விஜயத்தை மேற்கொள்கிறார்.

அவர் தனது இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப் படைத் தளபதி ஆகியோருடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார். Read more

துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற விரும்பவோர் தங்களது உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் அதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரமும் இந்த பக்கத்தில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. Read more

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஒழுங்குகளை பாதுகாப்பதற்கு இராணுவ வீரர்களை கடமையில் ஈடுப்படுத்துவதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெயிடப்பட்டுள்ளது.

இது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பாதகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான தகனாமி கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவிற்கு வலுசேர்க்கும் நிமித்தம் வருகை தந்துள்ள குறித்த கப்பலை சம்பிரதாயபூர்வமாக இலங்கை கடற்படையினர் வரவேற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 27 பேர் பங்களாதேஷில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவினரால் மீனவர்களின் 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹிக்கடுவ, பெரேலிய உள்ளிட்ட சில பகுதிகளிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களை விடுதலை செய்து மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவர்களின் உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Read more

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். Read more

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 2200 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில், தற்போது தென் கொரியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பலியானவர்களில் எண்ணிக்கை 2244 ஆக அதிகரித்துள்ளது. ஹூபி பகுதியில் மட்டும் 115 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் சுமார் 75,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். Read more

அனைத்து தேசிய பாடசாலைகளிலும் தவணைக் காலங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக அதிபர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவிக்கின்றது. Read more