கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 27 பேர் பங்களாதேஷில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவினரால் மீனவர்களின் 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹிக்கடுவ, பெரேலிய உள்ளிட்ட சில பகுதிகளிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களை விடுதலை செய்து மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவர்களின் உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் பங்களாதேஷிலுள்ள இலங்கை தூதரகத்துடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடியுள்ளதாக கடற்றொழில் திணைக்கள நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் பத்மப்ரிய திசேரா தெரிவித்துள்ளார்.