ஜப்பானின் ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான தகனாமி கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவிற்கு வலுசேர்க்கும் நிமித்தம் வருகை தந்துள்ள குறித்த கப்பலை சம்பிரதாயபூர்வமாக இலங்கை கடற்படையினர் வரவேற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பின்னர் குறித்த கப்பலின் கட்டளைத் தளபதி யுசி நிஹாரா உள்ளிட்ட அதிகாரிகள் குழு, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க உள்ளிட்ட குழுவினருடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.