துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற விரும்பவோர் தங்களது உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் அதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரமும் இந்த பக்கத்தில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்கள் அதனை மீள ஒப்படைப்பதற்கான காலவரையறையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. குறித்த காலப்பகுதிக்குள் வழங்கப்படாத துப்பாக்கிகளை மீட்டெடுக்கம் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.