கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 2200 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில், தற்போது தென் கொரியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பலியானவர்களில் எண்ணிக்கை 2244 ஆக அதிகரித்துள்ளது. ஹூபி பகுதியில் மட்டும் 115 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் சுமார் 75,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவது குறைந்துள்ளதாக சீனா கூறினாலும், வைரஸ் கண்டறியப்பட்டு 50 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கபடாததால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் தென் கொரியாவில் வேகமாக பரவி வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் ஏற்கனவே 156 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 52 க்கும் அதிகமானவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக தெரிகிறது. 25 க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பரவி இருப்பதால், மற்ற நாடுகளையும் இந்த வைரஸ் தாக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.