Header image alt text

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பகுதிகளுக்கு முப்படையினரை அனுப்புவது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்தமானி அறிவித்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து முன்னாள் ஜனாதிபதியினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதுடன், Read more

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வரை பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணத்தை அறவிடுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வீதி மற்றும் பெருந்தெருக்கல் அமைச்சு இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவை முதல் மத்தள வரையான சுமார் 200 கிலோ மீற்றர் பகுதியில் வாகன போக்குவரத்திற்காக கட்டணம் அறவிடப்படவுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 4 பேர் அங்கொட தொற்று நோய் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மற்றும் ஒருவர் குருநாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றையதினமான 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது. http://www.ketheeswaram.com/  என்பது இதன் முகவரி ஆகும்.

இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை மேற்கொள்ளலாம். அன்னதானம் வழங்குவதற்கு முற்பதிவு மேற்கொள்ளலாம். நன்கொடைகள் வழங்கலாம். இ ரிக்கற் ஊடாக அர்ச்சனை செய்யலாம். ஆலயத்துடன் தொடர்புடைய படங்கள் நூல்கள் இலக்கியங்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. Read more

மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையிலுள்ள விடயங்களை இலங்கை பாதுகாத்து நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. அதற்காக மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செல் பெச்சலட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். Read more

புதுச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read more

பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதில் பிரதம நீதியரசராக நேற்று முன்தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். Read more

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மின்மானிகளில் காணப்படும் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், சகல வசதிகளுடன் கொண்ட புதிய ஸ்மார்ட் மின்மானிகளை அறிமுகப்படுத்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார்துறை நிறுவனமொன்று அதனை வழங்கும் விநியோகஸ்தராக முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. Read more

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக உதயசூரியன் சின்னத்தில் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உதயமாகியுள்ளது.

சட்டத்தரணி சிவநாதன் தலைமையிலான கிழக்கு தமிழர் ஒன்றியம், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, கணேசமூர்த்தி தலைமையிலான இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு முதலான நான்கு கட்சிகள் இக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. Read more