இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 4 பேர் அங்கொட தொற்று நோய் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மற்றும் ஒருவர் குருநாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.