எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக உதயசூரியன் சின்னத்தில் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உதயமாகியுள்ளது.

சட்டத்தரணி சிவநாதன் தலைமையிலான கிழக்கு தமிழர் ஒன்றியம், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, கணேசமூர்த்தி தலைமையிலான இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு முதலான நான்கு கட்சிகள் இக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இதற்கான உடன்படிக்கையில் குறித்த நான்கு கட்சிகளும் கைச்சாத்திட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.