மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றையதினமான 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது. http://www.ketheeswaram.com/  என்பது இதன் முகவரி ஆகும்.

இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை மேற்கொள்ளலாம். அன்னதானம் வழங்குவதற்கு முற்பதிவு மேற்கொள்ளலாம். நன்கொடைகள் வழங்கலாம். இ ரிக்கற் ஊடாக அர்ச்சனை செய்யலாம். ஆலயத்துடன் தொடர்புடைய படங்கள் நூல்கள் இலக்கியங்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் பூசை நேரங்கள் ஆலயத்தாருடன் தொடர்பு கொள்ளும் வசதிகள் என்பனவும் இந்த இணையத்தளம் வாயிலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் யூன் மாதம் 10 ஆம் திகதி (10.06.2020) வைகாசி மாத திருவோண நட்சத்திர நாளில் கருங்கல்லால் அமைக்கப்பட்ட புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆலயத்திற்கான மகாகும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.