தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வரை பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணத்தை அறவிடுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வீதி மற்றும் பெருந்தெருக்கல் அமைச்சு இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவை முதல் மத்தள வரையான சுமார் 200 கிலோ மீற்றர் பகுதியில் வாகன போக்குவரத்திற்காக கட்டணம் அறவிடப்படவுள்ளது.