அடுத்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை சமர்பிக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பொது தேர்தல் இடம்பெற்று இரண்டு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி கலைக்கப்படுவதோடு எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பொதுத் தேர்தலுக்கு 500 கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.