வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில், நேற்றிரவு 8.30மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த வானும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது பஸ்சும் வேனும் தீப் பற்றி எரிந்துள்ள நிலையில், தீயானது தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டுள்ளதுடன், ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.