ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் மார்ச் 20 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அறிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பு நாடுகளினால் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 30இன் கீழ் ஒன்று மற்றும் 34இன் கீழ் ஒன்று முதலான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்ட, 40இன் கீழ் ஒன்று என்ற தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையை விலக்கிக் கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவையின் தீர்மானத்தை இவ்வாரம்; பேரவையில் உரையாற்றும்போது, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.