இலங்கை மத்திய வங்கி கட்டிடத்தின் மேற்பகுதியில் இருந்து கீழே குதித்து 16 வயது இளைஞன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (25) பிற்பகல் 3.15 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.