மன்னார் சதோச வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி, மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில்,  மன்னார் மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால், மன்னாரில், இன்று (25) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக,  மன்னார் மாவட்டச்  செயலகத்துக்கு முன்னால், முற்பகல் 9.30 மணிக்கு ஒன்றுகூடிய உறவுகள், அங்கிருந்து, மன்னார் சதோச வளாகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னர், அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.