11 இளைஞர்களை வௌ்ளை வானில் கடத்தி கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக, அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானமைத் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஏ.கே.பி. தசநாயக்க,  ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியங்களை வழங்கியுள்ளார்.

இதன்போது, ஐ.எஸ். பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பில் அமெரிக்காவில் இராணுவப் பயிற்சி பெற்று வந்த தான், அவசரமாக நல்லாட்சி அரசாங்கத்தின் அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டதாகவும் தசநாயக்க வாக்கு மூலமளித்துள்ளார்.