ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம், திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள உயர்க் கல்வி   அமைச்சர் பந்துல குணவர்தன,நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணைக்கும் இந்த விடயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தால், ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவையை செலுத்துவதற்காகவே, அரசாங்கம் குறை நிரப்பு பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது எனத் தெரிவித்துள்ள அவர்,   50 ஆயிரம் பட்டதாரிக்களுக்கு, பயிற்சிக் காலத்தில் 20,000 ரூபாய் கொடுப்பன  வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 இதற்கான நிதியை, அரசாங்கத்தின்  நிதி முகாமைத்துவத்தின் மூலம் சமாளிக்கக்கூடிய வல்லமை இருப்பதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்