ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை மார்ச் 11 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவருக்கு எதிரான வழக்கு இன்று (26) பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் பாரிய நிதி மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.