அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளது.இந்த நிலையில், நாளை (27) முதல் சட்டப்படி வேலையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 5 நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

6 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறையின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன.

இதேவேளை, அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் இசுறுபாயவிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.