மத்தள மற்றும் இரத்மலானை சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் விமானிகளுக்கான பயிற்சி நிறுவனங்கள் 2 ஆரம்பிக்கப்படவுள்ளன.உலகம் முழுவதிலும் விமான சேவைகளுடன் தொடர்புபட்ட கல்விக்கான அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு இதற்கான ஆலோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனங்கள் இரண்டையும் அமைப்பதற்கான வசதி இரத்மலானை விமான நிலையம் கொண்டுள்ளது.

இங்கு பாரிய விமானங்களை தரை இறக்குவதற்கான வசதியும் உண்டு என்று தெரிவித்த அமைச்சர் தேவையான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான காணி மத்தள, மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம் கொண்டுள்ளது.

உத்தேச புதிய பயிற்சி நிறுவனங்கள் இரண்டுக்காக டுபாய், தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளின் மாணவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச தரத்தக்கு அமைவாக இலங்கை விமான சேவை தொழில்துறை மற்றும் சந்தையில் அனுபவத்தைக் பரிமாறிக்கொள்வதற்கு இது பெரும் பின்புலமாக அமையும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)