அத்துமீறிய இந்திய இழுவைப் படகு தொழிலை தடை செய்ய வலியுறுத்தி தீவ மீனவர்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.யாழ்.பண்ணைப் பகுதியில் இருந்து இன்று (27) காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டமானது, நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் மகஜர் கையளிக்கப்பட்டதன் பின்னர், அங்கிருந்து, காங்கேசன்துறை வீதி வழியாக, கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் செய்ததுடன், அமைச்சரின் பிரதிநிதிகளிகளிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.

அங்கிருந்து, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்திற்கு சென்று, அங்கும் தூதுவரிடம் மகஸர் கையளித்தனர்.

இந்த போராட்டத்தின் போது, இந்திய இழுவைப் படகின் அத்துமீறலால், தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், எமது பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றதாகவும், தெரிவித்தனர்.

ஆகையினால், இந்திய இழுவைப் படகின் அத்துமீறிய தொழில் முறையை தடை செய்யுமாறும், வளங்களை சூரையாடுவதை தடை செய்யுமாறும், வேண்டுகோள் விடுத்ததுடன், வாழ்வாதாரம் இன்றி, எமது வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்கள்.