பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியினுள் சட்டவிரோதமாக 30 கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை கையகப்படுத்தியதன் ஊடாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜரான அரசாங்க சட்டத்தரணி, குறித்த வழக்கின் பிரதிவாதி சாட்சியாளர்ளுக்கு அழுத்தம் கொடுத்தாக முறைபாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பிரதிவாதி பிணையில் விடுதலையில் இருந்தால் சாட்சி விசாரணைக்கு தடை ஏற்படுவதால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.