153 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் போது சித்தியடைந்தவர்கள் புதிய அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் கல்விச்சேவை ஆணைக்குழுவினால் இவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் 373 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், அவற்றில் 278 தேசிய பாடசாலைகளுக்கு உரிய தரத்திலான அதிபர்கள் இதுவரை காலம் நியமிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.