வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய இருவரையும் மார்ச் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறுகம்பஹா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி கம்பஹா பகுதியில் 4.4 மில்லியன் ரூபா கொள்ளை சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட 10 பேரில் 6 பேர் கம்பஹா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களில் வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய இருவரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய 4 பேரும் இன்று மாலை கம்பஹா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.