கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டதான சந்தேகத்துடன் அங்கொட தொற்றுநோய் பிரிவு IDH வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இத்தாலியில் இருந்து வந்த இலங்கையர் இருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்ற உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம இது தொடர்பாக தெரிவிக்கையில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கு அமைய சம்பந்தப்பட்ட 2 நபர்களுக்கும் வைரஸ் தாக்கம் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியன நோய்க்கான அறிகுறி என தெரிவிக்கப்பட்டு அந்த இருவரும் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் IDH வைத்தியசாலைக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட நோயாளர்கள் மீண்டும் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவித்தார்.