அரசியல் பழிவாங்கல் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் வி.பி பர்ல் கே.வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு கிடைக்கப் பெற்ற முறைபாடுகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரட்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு தமது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.