தென்கொரியாவில் இருந்து  இலங்கைக்கு வருகைதருவோரின் எண்ணிக்கை  வெகுவாக அதிகரித்துள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக, அங்கிருந்து 182 பயணிகள் இன்று (01)அதிகாலை, கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளனர். இவர்களில், 137 பேர் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரு தினங்களாக, தென்கொரியாவில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.