போலியான விமானப் பயணச் சீட்டுக்கள் இரண்டை வைத்திருந்த இலங்கையர்கள் இருவர் நைஜீரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.நைஜீரியாவின் அபுஜாவில் அமைந்துள்ள நெம்ட் அசிகியூ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்து இலங்கையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் மலேசியாவுக்கான போலியான விமானப் பயணச் சீட்டுக்கள் இரண்டை பயன்படுத்தி லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி செல்ல தயாராக இருந்த போது நைஜீரியாவின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வருடத்தினுள் நைஜீரியாவில் போலியான விமானப் பயணச் சீட்டுக்களுடன் இலங்கையர்கள் கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சட்டவிரோத விமானப் பயணச்சீட்டுக்களை பாவித்து நாட்டில் இருந்து வௌியேறுவதற்காக குறித்த சந்தேகநபர்கள் நைஜீரியாவின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சில அதிகாரிகளின் ஆதரவினை பெற்றிருந்ததாக விசாரணைகளின் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.