மதஸ்தலங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் அனைத்து மதத் தலைவர்களையும் தௌிவுபடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட அதன் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (03) முற்பகல் மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்கர்களை தரிசித்து இது தொடர்பில் தௌிவு படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார்.